பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு
July 13 , 2023 771 days 422 0
சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்புடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அமலாக்க இயக்குநரகத்திற்கு அனுமதியளிக்கும் வகையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் விதிகளை இந்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
2002 ஆம் ஆண்டு பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் ஒரு திருத்தத்தின்படி, அமலாக்க இயக்குனரகம் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நிறுவனங்களின் பட்டியலில் சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு சேர்க்கப் பட்டுள்ளது.
பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழான தகவல்களை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குகின்ற 66வது பிரிவின் கீழ் உள்ள விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரி மோசடி மற்றும் போலிப் பதிவுகள் குறித்த வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரியினைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் போலியான பதிவுகள் மற்றும் உள்ளீட்டு வரி வரவு பெற்று மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.