பணமோசடி தடுப்புச் சட்டத்தின் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர்
September 16 , 2022 1192 days 531 0
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி பண்டாரி அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் இருந்து செப்டம்பர் 12 ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.
SAFEMA (கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் சட்டம்) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துப் பறிமுதல் தீர்ப்பாயம் மற்றும் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஆகியவை 2016 ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டில் ஒன்றாக இணைக்கப்பட்டன.