இந்திய ரிசர்வ் வங்கியானது பணவியல் கொள்கை முடிவுகளுக்கு மிகவும் பயனுள்ள உள்ளீடுகளைச் சேகரிப்பதற்காக வேண்டி, பணவீக்க எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட மூன்று முக்கியக் கணக்கெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
குடும்பங்களின் பணவீக்க எதிர்பார்ப்புகள் கணக்கெடுப்பு (IESH) ஆனது சுமார் 19 நகரங்களில், அவர்களின் தனிப்பட்ட நுகர்வுத் தொகுப்புகளின் அடிப்படையில், விலை மாற்றங்கள் மற்றும் பணவீக்கம் குறித்த அகநிலை மதிப்பீடுகளைப் பெறுவதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பானது (UCCS), மிகவும் பொதுவான ஒரு பொருளாதார நிலைமை, வேலைவாய்ப்புச் சூழ்நிலை, விலைகளின் நிலை மற்றும் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவினம் குறித்த அவர்களின் சில கருத்துகள் குறித்து குடும்பங்களிடமிருந்து தரம் சார் பதில்களைக் கோருகிறது.
கிராமப்புற நுகர்வோர் நம்பிக்கைக் கணக்கெடுப்பு (RCCS) ஆனது, குடும்பங்களின் தற்போதையக் கருத்துகள் மற்றும் ஓராண்டிற்கு முந்தைய அதன் எதிர்பார்ப்புகளைச் சேகரிக்கும்.
இது 31 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களிலிருந்து பொதுவானதொரு பொருளாதார நிலைமை, வேலைவாய்ப்புச் சூழ்நிலை, ஒட்டுமொத்த விலை நிலைமை, சொந்த வருமானம் மற்றும் செலவினம் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது.