பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிவற்றிற்கான உலக தினம் - ஏப்ரல் 28
May 12 , 2018 2551 days 976 0
பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிவற்றிற்கான உலக தினம் என்பது பணியில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்தை ஊக்குவிப்பதற்கான வருடாந்திர சர்வதேச பிரச்சாரம் ஆகும்.
பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கான உலக தினம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு எதிரான உலக தினம் ஆகியவை இளம் பணியாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் முறையினை ஒழித்தல் ஆகியவற்றிற்கான கூட்டுப்பிரச்சாரத்தில் முக்கியமான ஒன்றாக அமைகின்றன.
இந்தப் பிரச்சாரம், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் 8-வது இலக்கான அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை 2030ல் உருவாக்குதல் மற்றும் 7-வது இலக்கான அனைத்து முறையிலும் குழந்தைத் தொழிலாளர் முறையினை 2025 ஆம் ஆண்டிற்குள் ஒழித்தல் ஆகியவற்றை அடைவதற்கான செயல்களை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “இளம் பணியாளர்களின் பணிமுறை பாதுகாப்பு, ஆரோக்கியம், பாதிக்கப்படக்கூடிய நிலை” (Occupational Safety Health (OSH) vulnerability of young workers).