பண்டைய கால எரிமலை வெடிப்புகளிலிருந்து உருவான மாபெரும் படிவுகள்
December 28 , 2023 514 days 285 0
மத்தியத் தரைக் கடலின் அடிப்பகுதியில் உள்ள பண்டைய எரிமலை வெடிப்புகளிலிருந்து உருவான “மாபெரும் படிவுகளை” அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பகுதியைத் தாக்கும் பல ஆயிரம் ஆண்டு காலப் பேரழிவு நிகழ்வுகளின் சான்றுகளை இது காட்டுகிறது.
தற்போது கண்டறியப்பட்ட பழமையான படிவு அடுக்கு சுமார் 40,000 ஆண்டுகள் பழமையானது என்ற நிலையில், அதற்கு அடுத்தப் பழைமையான படிவு சுமார் 32,000 ஆண்டுகளும், மூன்றாவது படிவு 18,000 ஆண்டுகளும் பழமையானது ஆகும்.
இளம் (சற்று சமீபத்திய) படிவு மையமானது சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
மாபெரும் படிவுகள் என்பது எரிமலை வெடிப்புகள் போன்ற பேரழிவுகரமான இயற்கை நிகழ்வுகளின் காரணமாக கடல் படுகைகளில் உருவாகும் பொருட்களின் படிவுகளைக் குறிக்கிறது.