TNPSC Thervupettagam

பண்டைய கீழடி சமூகத்தினரின் முக வடிவமைப்பு

July 3 , 2025 10 hrs 0 min 33 0
  • தென்னிந்தியாவில் மிக முதன்முறையாக, சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கண்டு எடுக்கப் பட்ட சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகளிலிருந்து அந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் முகங்களை ஆராய்ச்சியாளர்கள் மீளுருவாக்கி உள்ளனர்.
  • இந்த முயற்சியை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை முன்னெடுத்து மேற்கொண்டன.
  • கீழடியில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள கொந்தகை புதைவிடத்தில் இருந்து மண்டை ஓடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
  • மண்டை ஓடுகளின் மேல் பகுதிகளை எண்ணிம முறையில் மீளுருவாக்குவதற்காக வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவு (CT ஸ்கேன்கள்) என்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன; கிடைக்கப்பெறாத தாடை எலும்புகள் நிலையான பற்சீரமைப்பு முறைகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன.
  • அந்தச் சமூகத்தினரின் முக அம்சங்கள் தென்னிந்திய, மேற்கு யூரேசிய மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மனிதர்களின் பண்புகளைப் பிரதிபலிக்கின்றன.
  • நவீன தென்னிந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட திசுக்களின் தடிமன் குறித்த தரவு ஆனது தசைகள், தோல் மற்றும் கொழுப்பு படிவு அடுக்குகளை மீளுருவாக்க உதவியது.
  • தோல், முடி மற்றும் கண் வண்ணங்களை மதிப்பிடுவதற்கு ஒரு புகைப்பட தரவுத்தளம் பயன்படுத்தப்பட்டது.
  • மரபணு வம்சாவளி மற்றும் புலம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக வேண்டி புதைவிடங்களிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ ஆனது தற்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  • கீழடியின் காலவரிசையானது, கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலாகும்.
  • மேலும் இந்தக் காலவரிசையானது தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கும் இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கும் (ASI) இடையே விவாதத்திற்குட்பட்டதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்