கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடம் உள்ள பரவலான அதிகாரங்களின் செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
2002 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக எழுப்பப் பட்ட ஒரு விரிவான எதிர்வழக்கின் பேரில் இந்தத் தீர்ப்பானது வழங்கப்பட்டது.
இந்தத் திருத்தங்கள் தனிப்பட்டச் சுதந்திரம், சட்ட நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு ஆணையை மீறுவதாகக் கூறி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விதியின்படி, அமலாக்க இயக்குநரகம் ஒருவரை அவரது குற்றச்சாட்டுகள் பற்றி தெரிவிக்காமல் கூட கைது செய்யலாம்.
இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது சரத்தில் கூறப்பட்டுள்ள ‘முறையான செயல்முறைக்கான' உரிமையை மீறுவதாகும்.
மேலும், 22வது சரத்தானது கைது செய்யப்பட்டதற்கானக் காரணத்தை ஒருவருக்குத் தெரிவிக்காமல் யாரையும் கைது செய்ய முடியாது.