இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2025 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதியன்று கட்டண ஒழுங்குமுறை வாரியத்தினை உருவாக்கியது.
இது முந்தையப் பண வழங்கீட்டு மற்றும் தீர்வு அமைப்புகளின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக்கான வாரியத்திற்கு மாற்றாக அமைகிறது.
RBI ஆளுநரின் தலைமையில் செயல்படும் இந்த வாரியமானது பண வழங்கீட்டு மற்றும் தீர்வு அமைப்புகளுக்கானப் பொறுப்பினைக் கொண்டுள்ள துணை ஆளுநர் மற்றும் நிர்வாக இயக்குநரை உள்ளடக்கியது.
இந்த வாரியமானது அனைத்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு, மின்னணு மற்றும் மின்னணு அமைப்புகள் சாராதப் பண வழங்கீட்டு முறைகளை ஒழுங்குப் படுத்தச் செய்வதற்கும் மேற்பார்வையிடுவதற்குமான பொறுப்பினைக் கொண்டுள்ளது.