இந்திய இரயில்வே நிர்வாகமானது, மத்தியப் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க (155 ஆண்டுகள் பழமையான) பதல்பானி-கலகுண்ட் என்ற பாரம்பரிய இரயிலின் இயக்கத்தினை மீண்டும் தொடங்கியுள்ளது.
இது டாக்டர் அம்பேத்கர் நகர் (முன்னர் மோவ் என்றழைக்கப்பட்ட) முதல் காண்ட்வா வரையிலான பாதையில் 9.5 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பகுதியாகும்.
இந்தப் பாதையை, 1844 முதல் 1886 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த மகாராஜா இரண்டாம் துகோஜி ராவ் ஹோல்கர் முன்மொழிந்தார்.
1870 ஆம் ஆண்டில், இந்தூருக்கு இரயில் பாதை அமைப்பதற்காக 101 ஆண்டுகளுக்கு 1 கோடி ரூபாய் கடனும், இலவச நிலமும் வழங்கினார்.
இந்தூர் சமஸ்தானம் ஆனது, 1818 ஆம் ஆண்டில் ஹோல்கர் வம்சத்தின் கீழ் பிரிட்டிஷ் கீழான காப்பு நாடாக மாறியதால், ரயில்வே மேம்பாட்டின் தேவையை உருவாக்கியது.
பதல்பானி–கலகுண்ட் பாதை இந்திய இரயில்வே நிர்வாகத்தின் ஆறு பாரம்பரியப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், இன்னும் இரயில்வே வாரியத்தின் அதிகாரப் பூர்வச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டில், 472.64 கிலோமீட்டர் நீளமுள்ள இரத்லம்-மோவ்-கண்ட்வா-அகோலா வழித்தடத்தினை அகல இரயில் பாதையாக (BG) மாற்ற என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
புவியியல் சிக்கல்கள் காரணமாக பதல்பானி-கலகுண்ட் பிரிவில் அகல இரயில் பாதை அமைக்கும் பணிகள் சாத்தியமில்லை.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியை பாரம்பரிய இரயில்களின் இயக்கத்திற்கான பாதையாக மாற்ற முடிவு செய்தது.