இந்தியாவின் மத்திய அரசானது அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் இயக்குநர்களுடைய பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான இரண்டு அவசரச் சட்டங்களை வெளியிட்டது.
தற்போது அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர்கள் 2003 ஆம் ஆண்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டத்தினால் 2 ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கப்படுகின்றனர்.
அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர்களை முதலில் 2 ஆண்டுக் காலத்திற்கு நியமிக்கலாம்.
எனினும் தேவைப்பட்டால் அவர்களின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு வேண்டி ஒவ்வொரு வருடமும் தனித்தனி நீட்டிப்பு உத்தரவுகள் அளிக்க வேண்டும்.
எனினும் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர்களின் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு எந்தவொரு பதவி நீட்டிப்பும் வழங்கப் படக் கூடாது.