TNPSC Thervupettagam

பதிக் - ஆதார் ஒருங்கிணைப்பு

February 3 , 2026 3 hrs 0 min 45 0
  • அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு, ஆதார் சரிபார்ப்பை PATHIK மென்பொருளுடன் ஒருங்கிணைத்த இந்தியாவின் முதல் காவல் படையாக மாறியுள்ளது.
  • PATHIK என்பது தங்கும் விடுதிகள், விருந்தினர் தங்குமிடங்கள் மற்றும் தங்கும் வீடுகள் போன்றவை பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பார்வையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு விருந்தினர் கண்காணிப்பு மென்பொருள் ஆகும்.
  • ஆதார் ஒருங்கிணைப்புடன், ஆதார் செயலி வழியாக QR குறியீடுகளைப் பயன்படுத்திப் பார்வையாளர்களை உடனடியாகச் சரிபார்க்க முடியும்.
  • இந்த அமைப்பு ஒப்புதலின் அடிப்படையில் செயல்படுகிறது, மேலும் ஆதார் எண்களைச் சேமிக்காமல், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட மக்கள்தொகை விவரங்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்துகிறது.
  • இந்த அமைப்பு 50-க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டறியவும், சட்ட விரோதக் குடியேறிகளை அடையாளம் காணவும் உதவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்