பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் (MoPR) அமைக்கப்பட்ட குழுவானது, நிரூபிக்கப் பட்ட பதிலீட்டு வழித் தலைமைத்துவ வழக்குகளில் "மிகப்பெரியத் தண்டனைகளை" பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் நிலவும் 'பிரதான் பதி', 'சர்பஞ்ச் பதி' அல்லது 'முக்கிய பதி' போன்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதில் பரிந்துரைக்கப்பட்ட பிற முன்னெடுப்புகள்:
கேரளா போன்று சில பஞ்சாயத்து துறைக் குழுக்கள் மற்றும் மன்ற அளவிலான குழுக்களில் பிரத்தியேக பாலினம் சார் ஒதுக்கீடுகள்;
பிரதான் பதி எதிர்ப்பு சாம்பியன்களுக்கான வருடாந்திர விருது;
மகளிர் குறைதீர்ப்பாளர்களை நியமித்தல்;
கிராம சபைகளில் மகளிர் பிரதான்களின் பொதுவெளி பதவியேற்பு;
பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்; மற்றும்
தலைமைத்துவப் பயிற்சி, சட்ட ஆலோசனை மற்றும் ஆதரவு வலையமைப்புகள் ஆகியவற்றுக்கான மையங்களாகச் செயல்படும் வகை பாலின வள மையங்களை அமைத்தல்.
இந்தியாவில் கிராமப் பஞ்சாயத்து (ஒரு கிராம அளவில்), பஞ்சாயத்து சமிதி (தொகுதி மட்டத்தில்) மற்றும் ஜில்லா பரிஷத் (மாவட்ட அளவில்) போன்ற மூன்று நிலைகளிலும் 32.29 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் சுமார் 2.63 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன.
இதில் 15.03 லட்சம் (46.6 சதவீதம்) பேர் பெண்கள் ஆவர்.