பத்திரிகைச் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின் முதன்மைப் பரிசு
May 6 , 2023 827 days 439 0
சிறையில் உள்ள மூன்று ஈரானியப் பெண் பத்திரிகையாளர்கள், பத்திரிகைச் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின் முதன்மைப் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர்.
நிலூஃபர் ஹமீதி, எலாஹே முகமதி மற்றும் நர்கஸ் முகமதி ஆகியோர் அந்த மூன்று வெற்றியாளர்கள் ஆவர்.
ஹமேதி, ஷார்க் எனப்படும் சீர்திருத்தவாத செய்தித்தாள் நிறுவனத்தில் பணி புரிகின்ற நிலையில், ஹம்-மிஹான் எனப்படுகின்ற சீர்திருத்தவாத செய்தித் தாள் நிறுவனத்தில் முகமதி பணி புரிகிறார்.
ஈரானில் மிகத் தளர்வாக தலையங்கி அணிந்ததற்காக 22 வயது சிறுமி ஒருவர் அறநெறி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போது உயிரிழந்ததை நிலௌபர் ஹமேதி செய்தி ஆக வெளியிட்டார்.
இலாஹே முகமதி அவரது இறுதிச் சடங்கு பற்றி எழுதினார்.
நர்கேஸ் முகமதி, பல வருடங்களாகப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் மற்றும் ஈரானின் முக்கியச் செயல்பட்டாளர்களில் ஒருவர் ஆவார்.