TNPSC Thervupettagam

பத்திரிகை குறிப்பு 3 தளர்வு

March 13 , 2026 5 days 63 0
  • இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகளில் பத்திரிகை குறிப்பு 3 (2020 ஆம் ஆண்டின் கீழ்) ஒரு பகுதியளவு தளர்வுக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் முதலீடுகளுக்கு அரசின் அனுமதி தேவை என்று பத்திரிகை குறிப்பு 3 (2020) கூறுகிறது.
  • இந்திய நிறுவனங்களை மற்ற நாடுகள் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தக் கொள்கை அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இந்தப் புதிய தளர்வு, மூலதனப் பொருட்கள், மின்னணு கூறுகள் மற்றும் சூரிய ஆற்றல் தயாரிப்பு உள்ளீடுகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தித் துறைகளில் வரையறுக்கப் பட்ட அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கிறது.
  • குறைக்கடத்திகள் போன்ற முக்கியத் துறைகள் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • நில எல்லை கொண்டுள்ள நாடுகளிலிருந்து 10% வரையிலான முதலீடுகள் நேரடி வழியில் அனுமதிக்கப்படலாம், அதே சமயம் பெரும்பான்மை உரிமை இந்திய நிறுவனங்களிடமே இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்