மூத்த விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஏ. இ. முத்துநாயகம், இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2026 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தியாவின் திரவ ராக்கெட் உந்துவிசைத் திட்டத்தின் முன்னோடியாக அறியப் படுகிறார்.
அவர் 1939 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் பிறந்தார்.
பிஎஸ்எல்வி (துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம்) மற்றும் ஜிஎஸ்எல்வி (புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனம்) ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விகாஸ் எஞ்சினை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
அவர் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (LPSC) நிறுவன இயக்குநராகவும் இருந்தார்.