பத்ம பூஷன் விருது பெற்ற வினோத் ராய் எழுதிய புத்தகம்
May 1 , 2022 1193 days 550 0
பத்ம பூஷன் விருது பெற்ற வினோத் ராய் "Not Just A Nightwatchman: My Innings in the BCCI" என்ற தலைப்பில் ஒரு புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
இவர் இந்தியாவின் முன்னாள் (11வது) தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆவார்.
உச்ச நீதிமன்றம் நியமித்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் குழுவில் தான் ஆற்றிய 33 மாத காலப் பணி அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குடிமைப் பணிக்காக அவருக்கு 2016 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் இவர் வங்கிகள் வாரியப் பணியகத்தின் முதல் தலைவராக நியமிக்கப் பட்டார்.