TNPSC Thervupettagam
January 28 , 2026 3 days 72 0
  • 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு 131 பத்ம விருதுகளை வழங்குவதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • பத்ம விருதுகள் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றாகும் என்பதோடு இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப் படுகின்றன.
  • 2026 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 5 பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.
  • கலை, பொது விவகாரங்கள், மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப் பணி போன்ற துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
  • இந்த பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர் / வெளிநாடு வாழ் இந்தியர்கள் / இந்திய வம்சாவளியினர்/ வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் 16 மறைவுக்குப் பிந்தைய விருதுகள் அடங்கும்.
  • கலைத்துறைக்கு ஆற்றியப் பங்களிப்புகளுக்காக என். ராஜம் மற்றும் தர்மேந்திர சிங் தியோல் (மறைவுக்குப் பின்) பத்ம விபூஷன் விருது பெற்றனர்.
  • கலை மற்றும் வர்த்தகத் துறைகளில் ஆற்றிய சாதனைகளுக்காக அல்கா யாக்னிக், மம்மூட்டி மற்றும் உதய் கோடக் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்