சமீபத்தில், காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (KVIC) சுய-நிலைத் தன்மை மற்றும் கைவினைஞர் படைப்பாற்றலை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி “பனாரசி பஷ்மினா” என்ற இழையை அறிமுகப்படுத்தியது.
லே-லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் பகுதிகளுக்கு வெளியே பஷ்மினா பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது லே-லடாக், டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கலைத் திறன்களின் ஒரு கலவையை உருவாக்குகிறது.
இது லடாக்கில் பெண்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் வாரணாசியில் உள்ள பாரம்பரிய நெசவாளர்களின் திறன்களைப் பல்வகைப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.