TNPSC Thervupettagam

பனிக்கால 'ஜாம்பி' புழு உயிர்ப்பு

April 30 , 2026 15 hrs 0 min 13 0
  • சைபீரிய உறைபனிப் பகுதியிலிருந்து 24,000 ஆண்டுகள் பழமையான நுண்ணிய உயிரினத்தை அறிவியலாளர்கள் மீண்டும் உயிர்ப்பித்ததுடன் அது இனப்பெருக்கம் செய்வதையும் கண்டறிந்துள்ளனர்.
  • ஊடகங்களில் "ஜாம்பி புழு" என்று பரவலாக அழைக்கப்படுகின்ற இந்த உயிரினம் 'டெலாய்ட் ரோட்டிஃபர்' (ஒரு பல செல் நன்னீர் விலங்கு) ஆகும்.
  • இது சைபீரியாவில் உள்ள அலசேயா நதிக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி இது பிந்தைய பிளீஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமார் -20°C வெப்பநிலையில் யெடோமா உறைபனியில் (பனி நிறைந்த நிரந்தரமாக உறைந்த மண்) உறைந்த நிலையில் இருந்தது.
  • இது 'கிரிப்டோபயாசிஸ்' (வாழ்க்கை செயல்முறைகள் கிட்டத்தட்ட நின்று விடுவதோடு பூஜ்ஜியத்திற்கு நிகரான வளர்சிதை மாற்ற நிலை) மூலம் உயிர் பிழைத்து உள்ளது.
  • ஆய்வக நிலைகளில் பனி உருகிய பிறகு, இது நகர்தல் மற்றும் உணவளித்தல் போன்ற செயல்களை மீண்டும் தொடங்கியதோடு  பாலிலா முறையில் இனப் பெருக்கம் செய்து தனது குளோன்களை உருவாக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்