TNPSC Thervupettagam

பனையூர் தொல்லுயிர் எச்சங்கள் - ஹோலோசீன் காலம்

April 28 , 2026 3 days 88 0
  • தூத்துக்குடி மாவட்டம் பனையூரில் காணப்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் ஹோலோசீன் காலத்தை (சுமார் 8,000–12,000 ஆண்டுகளுக்கு முந்தையது) சேர்ந்தவை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய விலங்கியல் ஆய்வகம் (ZSI) கள ஆய்வு மற்றும் அறிவியல் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
  • மன்னார் வளைகுடா அருகே கண்டெடுக்கப்பட்ட இந்தத் தொல்லுயிர் எச்சங்களில், முக்கியமாக இருவோட்டு உயிரினங்கள் மற்றும் வயிற்றுக்காலிகள் (gastropods) உள்ளிட்ட நான்கு பிரிவுகளைச் சேர்ந்த 104 மாதிரிகள் அடங்கும்.
  • பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் சுற்றுச்சூழல் தொடர்ச்சியைக் காட்டும் விதமாக இந்த உயிரினங்கள் தற்போதைய கடல்வாழ் உயிரினங்களை ஒத்திருக்கின்றன.
  • இந்தத் தொல்லுயிர் எச்சங்கள் மிதமான நீரோட்டம் மற்றும் வெப்பமான வெப்ப மண்டல நிலைமைகளுடன் கூடிய ஆழமற்ற கடல் மற்றும் முகத்துவாரச் சூழலைக் குறிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்