செங்கடல், பாப் அல்-மாண்டெப் நீர்ச்சந்தி மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவற்றில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சவுதி அரேபியா பன்னாட்டுக் கடல் சார் பாதுகாப்பு கூட்டணியை (MMDC) தொடங்கியுள்ளது.
வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று ரியாத்தில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்தக் கூட்டணி உருவாக்கப் பட்டது.
சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, வங்கதேசம், ஏமன், சோமாலியா, ஜிபூட்டி மற்றும் கொமொரோஸ் உள்ளிட்ட 14 நாடுகள் ஆரம்பத்தில் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டன.
பன்னாட்டுக் கடல்சார் பாதுகாப்பு கூட்டணியின் தலைமையகம் ரியாத்தில் அமைந்து உள்ளதுடன்மேலும் கூட்டுக் கடல்சார் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு மையங்களையும் இது கொண்டுள்ளது.
இதன் முதல் தளபதியாக சவுதி ரியர் அட்மிரல் அப்துல்லா பின் சலேம் அல்-ஷெஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.