பன்னாட்டு சூரியசக்தி கூட்டிணைவு கட்டமைப்பு ஒப்பந்தம் – ஜெர்மனி
August 7 , 2021 1463 days 568 0
பன்னாட்டு சூரியசக்தி கூட்டிணைவு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 5வது நாடாக ஜெர்மனி மாறியுள்ளது.
இக்கூட்டிணைவு ஒப்பந்தத்தில் இணைவதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் அனுமதி வழங்குவதற்காக மேற்கொள்ளப் பட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வந்ததையடுத்து இது சாத்தியமானது.
குறிப்பு
இதற்கு முன்பு பன்னாட்டு சூரியசக்தி கூட்டிணைவிற்கான உறுப்பினர் அந்தஸ்து 121 நாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப் பட்டிருந்தது.
அவை வெப்பமண்டலப் பகுதியினுள் பகுதியளவு அல்லது முழுவதுமாக அமைந்துள்ள நாடுகள் ஆகும்.
இந்த வரையறையானது ஜெர்மனி போன்ற மிகப்பெரிய சூரியசக்தி பொருளாதார நாடுகள் இந்தக் கூட்டிணைவில் இணைய அனுமதிக்கவில்லை.