இந்தி மொழியை உள்ளடக்கிக் குறிப்பிடுகின்ற பன்மொழித் தன்மை குறித்த இந்தியா முன் வைத்த ஒரு தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது முதன் முறையாக ஏற்றுக் கொண்டது.
இந்தத் தீர்மானமானது, இந்தி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற மொழிகளில் முக்கியமான தகவல்தொடர்புகள் மற்றும் செய்திகளைத் தொடர்ந்துப் பரப்புவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகிறது.
ஐக்கிய நாடுகளின் தீர்மானமானது, உருது மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளையும் முதன்முறையாக குறிப்பிடுகிறது.