பன்றியிலிருந்து மனிதருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
March 28 , 2024 509 days 516 0
இறுதி நிலை சிறுநீரக நோய்ப் பாதிப்புள்ள 62 வயது முதியவர், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்துப் பெறப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் ஆவார்.
மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள eGenesis நிறுவனத்தினால் மரபணு மாற்றப் பட்ட ஒரு பன்றியிலிருந்து இந்த சிறுநீரகம் வழங்கப்பட்டது.
இந்தச் சிறுநீரகத்தினை பெறும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்களை அகற்றவும், அந்த உறுப்பின் பொருந்தக் கூடிய தன்மையை மேம்படுத்துவதற்காக சில மனித மரபணுக்களைச் சேர்ப்பதற்காகவும் அந்த பன்றியின் மரபணுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.