TNPSC Thervupettagam
June 9 , 2026 5 days 88 0
  • குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் இரண்டு ஆசிய சிங்கக் குட்டிகள் பபேசியா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
  • பபேசியா தொற்று (பபேசியோசிஸ்) என்பது பபேசியா இனத்தைச் சேர்ந்த புரோட்டோசோவா ஒட்டுண்ணிகளால் ஏற்படும், உண்ணிகளால் பரவக்கூடிய ஒரு நோயாகும்.
  • இந்த ஒட்டுண்ணி இரத்த சிவப்பணுக்களுக்குள் தொற்று ஏற்படுத்தி, எண்ணிக்கையில் பெருகுகிறது.
  • இது முக்கியமாக இக்சோடெஸ், ரிப்பிசெபாலஸ், டெர்மசென்டர் மற்றும் ஹீமாபிசாலிஸ் போன்ற பாதிக்கப்பட்ட உண்ணிகள் மூலம் பரவுகிறது.
  • காய்ச்சல், இரத்த சோகை, மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இரத்த சிவப்பணுக்கள் அழிதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
  • பபேசியோசிஸ் என்பது ஒரு விலங்கினவழி நோயாகும், மேலும் இது பாதிக்கப்பட்ட உண்ணி கடிப்பதன் மூலமாகவோ அல்லது மாசுபட்ட இரத்தத்தின் மூலமாகவோ மனிதர்களுக்கும் பரவக்கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்