March 13 , 2026
5 days
104
- தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை, பம்பை ஆற்றங்கரையில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் போது இரும்புக்கால கலாச்சாரப் பொருட்களைக் கண்டறிந்து உள்ளது.
- இதில் இரும்புக்கால ஈமத்தாழிகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், உறை கிணறுகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
- இந்த ஆய்வு விழுப்புரம் மாவட்டத்தின் பல கிராமங்களில் நடத்தப்பட்டது.
- மக்கள் வாழ்ந்த குடியிருப்பு மேடுகள் மற்றும் புதைவிடங்களில் இந்தத் தொல்பொருள் எச்சங்கள் கிடைத்துள்ளன.
- இந்தப் பொருட்கள் இரும்புக் காலம், ஆரம்பக்கால வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.
Post Views:
104