TNPSC Thervupettagam

பயணம், சுற்றுலா போட்டித்திறன் குறியீடு

September 6 , 2019 2118 days 758 0
  • உலகப் பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா ஆறு இடங்கள் முன்னேறி 34வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • சாதகமான காரணிகள்: வளமான இயற்கை மற்றும் கலாச்சார வளங்கள் மற்றும் இந்தியாவில் வலுவான விலை சார்ந்த போட்டித் திறன்.
  • தெற்காசியாவின் பயண மற்றும் சுற்றுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. மேலும் துணைப் பிராந்தியத்தின் மிகவும் போட்டி மிக்க பயண மற்றும் சுற்றுலாப் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
  • பயண மற்றும் சுற்றுலாப் போட்டித்திறன் குறியீடானது (Travel & Tourism Competitiveness Index - TTCI) உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது.
  • இந்தப் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இதற்கு அடுத்த இடங்களில்  பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
  • ஆசியாவின் மிகவும் போட்டிமிக்க பயண மற்றும் சுற்றுலாப் பொருளாதாரமாக  ஜப்பான் விளங்குகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்