TNPSC Thervupettagam

பயன்படுத்தப்படாத மருந்துகள் குறித்த UNEP அறிக்கை 2026

March 20 , 2026 12 hrs 0 min 16 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) "பயன்படுத்தப்படாத மருந்துகளைப் பாதுகாப்பாக அகற்றுதல்" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை மனிதன், விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நல அமைப்புகளை ஒருங்கிணைக்கும் 'ஒரே ஆரோக்கியம்' அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறது.
  • மருந்துகளை முறையாக அகற்றாதது நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR), சுற்றுச் சூழல் நச்சுத்தன்மை மற்றும் நாளமில்லாச் சுரப்பி பாதிப்புகளுக்கு வழி வகுக்கிறது.
  • உலகளவில் சுமார் 50% மருந்துகள் கழிவுகளாக மாறுகின்றன, மேலும் பயன்படுத்தப் படாத மருந்துகள் அபாயகரமான சுகாதாரக் கழிவுகளில் சுமார் 3% ஆகும்.
  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலும் மருந்து மாசுபாடுகளை முழுமையாக அகற்றுவதில் பயனற்றவையாக உள்ளன.
  • உயர் வெப்பநிலை எரிப்பு, கழிவுகளை நிலைப் படுத்துதல், பொறியியல் குப்பைக் கிடங்குகள் மற்றும் இணை செயலாக்கம் போன்றவை பரிந்துரைக்கப்பட்ட முறைகள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்