பயிர்களுக்கான AI மரபணுத் திருத்தம் - Plants-OpenCRISPR1
May 25 , 2026 14 hrs 0 min 38 0
பயிர்களுக்கான உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வடிவமைக்கப்பட்ட மரபணு திருத்தத் தளமான "பிளாண்ட்-ஓபன் சிஆர்ஐஎஸ்பிஆர்1" (Plant-OpenCRISPR1) என்பதை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தளம் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) கீழ் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சி கட்டாக்கில் நெற்பயிரை ஒரு மாதிரிப் பயிராகக் கொண்டு சோதித்து நடத்தப்பட்டது.
Plant-OpenCRISPR1 ஆனது தாவரங்களில் தாவரங்களில் மரபணு நீக்கம், காரத் தொகுப்பு மாற்றம் மற்றும் முதன்மைத் தொகுப்பு மாற்றம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
பாரம்பரிய CRISPR அமைப்புகளில் பயன்படுத்தப்படும் இயற்கையான நுண்ணுயிர் புரதங்களுக்குப் பதிலாக, இந்தத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவால் வடிவமைக்கப் பட்ட நொதிகளை/என்சைம்களைப் பயன்படுத்துகிறது.
இத்தொழில்நுட்பம் பயிர் இனப்பெருக்கம், விவசாய உற்பத்தித்திறன் மற்றும் தாவரங்களில் துல்லியமான மரபணு திருத்தம் ஆகியவற்றை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.