TNPSC Thervupettagam

பரந்தூர் விமான நிலையம் - சிறப்புத் திட்டம்

March 11 , 2026 14 hrs 0 min 34 0
  • பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்களுக்காக) சட்டம், 2023ன் கீழ் ஒரு "சிறப்புத் திட்டம்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஒப்புதல் செயல்முறைகளை விரைவு படுத்தச் செய்வதற்காக இத்திட்டம் சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இச்சட்டத்தின் கீழ், 100 ஹெக்டேருக்கு மேல் நிலம் தேவைப்படும் திட்டங்களுக்கு விரைவான நில ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக சிறப்புத் திட்டங்களாக அறிவிக்க முடியும்.
  • இந்த விமான நிலையத் திட்டத்திற்கு 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, அதில் இதுவரை சுமார் 1,700 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவும், வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டத்தைத் தயாரிக்கவும் மாநில அரசு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கும்.
  • ₹27,400 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதோடு இது நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்