பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்
January 15 , 2020 2043 days 600 0
குற்றங்களுக்கு எதிரான சுழிய சகிப்புத்தன்மை என்னும் இந்திய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் பிற நாடுகளுடனான குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி மற்றும் நீதி வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகமானது திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, குற்றவியல் விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்குவதற்காக, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா 42 நாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமானது அதற்காகவே ‘இந்திய மத்திய ஆணையம்’ என்னும் அமைப்பினை நியமித்துள்ளது.