TNPSC Thervupettagam

பரஸ்பர நிதி மூலம் பணம் செலுத்துதல்

October 30 , 2025 16 hrs 0 min 16 0
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) ஆனது தற்போது பயனர்கள் குறுகிய கால பரஸ்பர நிதி இருப்புகளைப் பயன்படுத்தி நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது.
  • பயனர்கள் தங்கள் பரஸ்பர நிதிக் கணக்குகளை தங்கள் UPI அடையாள எண்ணுடன் (ID) இணைத்து, பணம் செலுத்துதலின் போது இந்தப் புதிய கட்டண விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்யலாம்.
  • வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டிய அவசியமின்றி, பரஸ்பர நிதியிலிருந்து பணம் உடனடியாகக் கழிக்கப்படுகிறது.
  • இந்த அம்சம் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) ஒழுங்கு படுத்தப் படுகிறது மற்றும் UPI அமைப்பின் பாதுகாப்பான அமைப்புடன் இது நன்கு ஒருங்கிணைக்கப் படுகிறது.
  • மேலும் விரிவுபடுத்துவதற்கானத் திட்டங்களுடன் தற்போது, ​​இது தேர்ந்தெடுக்கப் பட்ட வணிகர்கள், இயங்கலை தளங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைக் கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்