மத்திய அரசானது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினத்தைத் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதியை பராக்கிராம் திவாஸ் என்ற தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தினமாகும்.
1942 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள இந்தியாவிற்கான சிறப்பு முகமையில் உள்ள இந்தியப் போர் வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப் பிரிவு மற்றும் ஜெர்மானிய மற்றும் இந்திய அதிகாரிகளால் சுபாஷ் சந்திர போஸிற்கு நேதாஜி என்ற பட்டமானது வழங்கப் பட்டது.