TNPSC Thervupettagam

பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு

September 1 , 2025 5 days 54 0
  • அனைத்து வகையான பருத்திகளுக்கும் 11 சதவீத இறக்குமதி வரிக்கான விலக்கை இந்திய அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
  • இந்த முடிவை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) அறிவித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது ஒட்டு மொத்த ஜவுளி மதிப்புச் சங்கிலியிலும் உள்ளீட்டுச் செலவுகளை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பருத்தி ஜவுளி ஏற்றுமதி மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 33 சதவீதமாக இருந்தது.
  • அதே காலக் கட்டத்தில் இந்த ஏற்றுமதிகள் 7.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப் பட்டன.
  • இந்தியா அதன் பருத்தி உற்பத்தியில் 95 சதவீதத்தை, உள்நாட்டு ஜவுளித் தொழில் துறையில் பயன்படுத்துகிறது.
  • ஜவுளி-ஆடை மதிப்புச் சங்கிலியில் 45 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணி புரிகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்