TNPSC Thervupettagam

பருப்பு வகைகள் குறித்த 5வது மாநாடு - 2020

January 11 , 2020 2005 days 1048 0
  • பருப்பு வகைகள் குறித்த 5வது மாநாடு – 2020 ஆனது மகாராஷ்டிராவின் லோனாவாலாவில் நடைபெற இருக்கின்றது.
  • இது இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ஒரு மாநாடாகும்.
  • இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானியச் சங்கமானது இந்த மாநாட்டை நடத்த இருக்கின்றது.
  • மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவை இந்தியாவில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள மாநிலங்களாகும்.
  • உலக அளவில் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர், மிகப்பெரிய பருப்பு நுகர்வோர் மற்றும் உலகில் பருப்பு வகைகளை மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • பருப்பு வகைகள் மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன. எனவே இவை வருடாந்திரப் பருப்பு வகைப் பயிர்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்