பருவநிலைச் சமவிகித கண்காணிப்பு அமைப்பு என்பது சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்ட ஓர் இணையவழி முகப்புப் பக்கமாகும்.
இந்தியாவினுடைய பருவநிலைச் சமவிகிதக் கண்காணிப்பு அமைப்பானது, உலகம் முழுவதுமான பருவநிலை நடவடிக்கை, உமிழ்வு நிலையிலுள்ள ஏற்றத் தாழ்வுகள், ஆற்றல் மற்றும் வள நுகர்வு மற்றும் பல நாடுகளின் தற்போதையப் பருவநிலை கொள்கைகளை மதிப்பிடும்.
இது முக்கியப் பிரச்சினைகள் குறித்த ஒரு தீவிர விவாதத்தினை ஏற்படுத்தி அதில் அனைத்து நாடுகளின் நிபுணர்களையும் ஈடுபடச் செய்யும்.