2026 ஆம் ஆண்டு பருவநிலை ஆபத்துக் குறியீடு (CRI) ஆனது ஜெர்மன்வாட்ச் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
1995 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
வெள்ளம், புயல்கள், வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் பனிப்பாறை ஏரி வெடிப்புகள் போன்ற விரைவாக நிகழும் நிகழ்வுகளை இந்தக் குறியீடு பகுப்பாய்வு செய்கிறது ஆனால் கடல் மட்ட உயர்வு அல்லது பனிப்பாறைகளின் குறைவு போன்ற மெதுவாகத் தொடங்கும் நிகழ்வுகளை விலக்குகிறது.
கடந்த 30 ஆண்டுகளில், இந்தியா சுமார் 430 தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டது என்பதோடுஇது 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்ததுஎன்ற நிலையில்இதனால் சுமார் 170 பில்லியன் டாலர் பணவீக்கம் ஈடு செய்யப்பட இழப்புகள் மற்றும் 80,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.
2024 ஆம் ஆண்டில் மட்டும், பருவமழையானது குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுராவில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது.
தீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பிலிப்பைன்ஸ், நிகரகுவா மற்றும் ஹைட்டியுடன் சேர்ந்து இந்தியா, "தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாடுகள்" என்ற பிரிவின் கீழ் உள்ளது.
அதாவது, காலப்போக்கில் ஒட்டு மொத்த இழப்புகளுடன் மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடிய தீவிர வானிலை நிகழ்வுகளை இந்தியா எதிர்கொள்கிறது.
1995–2024 ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய தீவிர வானிலை 8,32,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், 4.5 டிரில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டிய பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியது.
இது COP30 மாநாட்டில் தழுவல் மற்றும் பருவநிலை நிதி ஆதரவின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.