பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டின் COP30 மாநாட்டில் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்த முன்னெடுப்பிற்கு கம்போடியா தனது ஆதரவை அறிவித்தது.
கம்போடியா இதில் இணைந்ததன் மூலம், இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டினை படிப்படியாக அகற்றச் செய்வதற்கான ஒரு உலகளாவியச் சட்டத் திட்டத்தை உருவாக்கச் செய்வதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பில் இலங்கை மற்றும் நேபாளம் உட்பட மேலும் பத்து நாடுகள் தற்போது முறைசாரா பார்வையாளர் நாடுகளாக உள்ளன.