TNPSC Thervupettagam

பருவநிலை நிதி தளம்

November 20 , 2025 8 days 60 0
  • பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 மாநாட்டில் "பருவநிலை மற்றும் இயற்கை நிதி"க்கான தேசிய தளத்தை இந்தியா அறிவித்தது.
  • இந்தத் தளம் ஆனது 2015 ஆம் ஆண்டு முதல் உலகளவில் 19 பில்லியன் டாலரை உறுதி செய்துள்ள பசுமை பருவநிலை நிதியம் (GCF) மூலம் செயல்படும்.
  • இந்தியா மற்ற 12 நாடுகளுடனும் ஆப்பிரிக்க பிராந்திய கூட்டணியுடனும் இணைந்து, தணிப்பு மற்றும் ஏற்பு நடவடிக்கைகளுக்காகப் பருவநிலை நிதியை அணுகுவதை ஒழுங்குபடுத்துகிறது.
  • இங்கு இந்தியா, தூய்மையான எரிசக்தி, நீர், போக்குவரத்து மற்றும் பருவநிலை சார் புத்தொழில் நிறுவனங்களில் 11 திட்டங்களில் 782 மில்லியன் டாலர் மதிப்புள்ள GCF உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.
  • இந்தத் தளம் அதன் ஆரம்பக் கட்டத்தில் ஆப்பிரிக்கா பருவநிலை அறக்கட்டளையால் வழங்கப்படும் 4 மில்லியன் டாலர் ஆரம்ப நிதியுடன் ஆதரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்