பருவநிலை நெகிழ்திறனுடன் கூடிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
December 28 , 2023 606 days 391 0
உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவானது, 300 மில்லியன் டாலர் மதிப்பிலான தமிழ்நாடு பருவநிலை நெகிழ்திறனுடன் கூடிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது நகரங்களில் வாழும் சுமார் 2 மில்லியன் மக்களுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் சேவைகளுக்கான சிறந்த அணுகலை வழங்கும்.
இது 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) தங்கள் சேவை வழங்கீட்டு முறைகளை மேம்படுத்தவும், நுகர்வோருக்குத் தரமான மற்றும் திறன் மிக்க நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சேவைகளை வழங்கவும் உதவும்.
சர்வதேச மறுக்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி ஆனது, தொழில்நுட்ப உதவியை வழங்குவதோடு, திட்டத்திற்கான பலன்களை அடைவதற்காக நேரடியாக நிதி வழங்குவதற்கு முதலீடுகள் சார்ந்த திட்ட நிதியளித்தல் வசதியுடன் (IPF) சேர்த்து, பலன் சார்ந்து தொடங்கப்படும் திட்டங்களுக்கு நிதியளித்தல் வசதியை (PforR) பயன்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்திற்கு வழங்கப்படும் கடனானது 32 ஆண்டுகள் நிறைவு காலம் மற்றும் 7 ஆண்டுகள் சலுகைக் காலத்தினை கொண்டுள்ளது.