பருவநிலை மாற்றத்தை ஆய்வு செய்வதற்கான முதலாவது பிரான்ஸ்-சீனா செயற்கைக்கோள்
October 31 , 2018 2470 days 856 0
கடற்பரப்பின் மேற்பரப்பில் வீசும் காற்றையும், அலைகளையும் ஆய்வு செய்வதற்காக முதலாவது பிரான்ஸ்-சீனா செயற்கைக் கோள் விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.
இது சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து Long March 2C என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
இது சூறாவளிகளை முன்கூட்டியே கணிப்பதற்கும், பருவநிலை மாற்றம் பற்றியும், பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்திற்கிடையே ஏற்படும் உள்ளிணைப்புகள் பற்றியும் விஞ்ஞானிகளின் புரிதலை மேம்படுத்துவதற்கும் உதவும்.
சீனா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றால் இணைந்து அனுப்பப்படும் முதல் செயற்கைக் கோள் இதுவாகும்.
இந்த செயற்கைக் கோள் 2 ரேடார்களோடு பொருத்தப்பட்டுள்ளது.
பிரான்சால் தயாரிக்கப்பட்ட ஸ்விம் (SWIM) - அலைகளின் நீளம் மற்றும் திசையை அளப்பதற்கு உதவும்.
சீனாவின் SCAT - அலைகளின் வலிமை மற்றும் திசையை ஆய்விடுவதற்கு உதவும்.
தகவல்கள் சீனா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளாலும் இணைந்து சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.