பருவநிலை மாற்றம் மீதான பேசிக் (BASIC) நாடுகளின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு
November 23 , 2018 2451 days 817 0
பருவநிலை மாற்றம் மீதான பேசிக் (BASIC) நாடுகளின் அமைச்சர்களுக்கிடையேயான 27-வது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது.
இது பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு வளரும் நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆதரவு அளிப்பதை வலியுறுத்துகிறது.
2018 ஆம் ஆண்டின் டிசம்பரில் போலந்தின் கோட்டாவைசில் ஐ.நா. உறுப்பினர்கள் மாநாடு (COP - Conference of Parties) நடைபெறவிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டில் பேசிக் நாடுகளின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை பிரேசில் நடத்தவிருக்கிறது.
பேசிக் நாடுகளானது பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 4 பெரிய புதிதாக தொழில்மயமான நாடுகளின் கூட்டணியாகும்.
இது 2009 ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது.