ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், ஜெனீவா நகரிலுள்ள உலக வானிலை அமைப்புடன் இணைந்து இந்தத் திட்டத்தினை அறிவித்தார்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களின் காரணமாக, இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி உருவாகுவதாலும் அவை மிக சக்தி வாய்ந்ததாக இருப்பதாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பூமியிலுள்ள ஒவ்வொருவரையும் வானிலை முன்னெச்சரிக்கை வரம்பிற்குள் இணைப்பதற்காக இத்திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், குறிப்பாக குறைவான அளவே வளர்ச்சியடைந்த நாடுகள், முன்னெச்சரிக்கை அமைப்பின் மூலம் பயன் பெறுவது இல்லை.
ஆப்பிரிக்காவில் வாழும் 60% சதவீத மக்கள் இந்த அமைப்புகளின் மூலம் பலன் எதுவும் பெறுவதில்லை.