பர்யதான் பர்வ் 2019 – சுற்றுலாத் துறை முன்னெடுப்பு
October 2 , 2019 2151 days 678 0
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது “பர்யதான் பர்வ் 2019” என்ற ஒரு சுற்றுலா சார்ந்த முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
இந்தியர்களிடையே உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிப்பதும் “அனைவருக்கும் சுற்றுலா” என்ற செய்தியைப் பரப்புவதும் இந்த முன்னெடுப்பின் நோக்கங்களாகும்.
மேலும், நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.05 கோடி சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர்.
உலக சுற்றுலாத் தரவரிசையில் நாட்டின் இடம் 2013 ஆம் ஆண்டில் 65வது இடத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.