மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC - University Grants Commission) பரமார்ஷ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட உயர் கல்வியானது வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
தேசிய அங்கீகார மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (National Accreditation and Assessment Council - NAAC) அங்கீகாரத்தைப் பெறுதலையும் தரமான கல்வியை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் வழிகாட்டியாக இருக்கும்.
இந்தத் திட்டமானது வழிகாட்டுதல் வழங்குவதற்காக 1000 உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதை இலக்காகக் கொண்டிருக்கும்.