பல்நாளமில்லாச் சுரப்பி வளர்சிதை மாற்றக் கருப்பை நோய்க்குறி – PMOS
May 18 , 2026 93 days 186 0
பல்கட்டி கருப்பை நோய்க்குறி (PCOS) என்பதன் உயிரியல் சிக்கலைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு சர்வதேசக் குழு அதற்கு ‘பல்நாளமில்லாச் சுரப்பி வளர்சிதை மாற்றக் கருப்பை நோய்க்குறி' (PMOS) என மறுபெயரிட்டுள்ளது.
முந்தைய சொல்லான PCOS என்பது தவறாக வழிநடத்துவதாகக் கருதப்பட்டது, ஏனெனில் பல நோயாளிகளுக்கு உண்மையான சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதில்லை; அவை உண்மையில் முதிர்ச்சியடையாத நுண்ணறைகளே (immature follicles) ஆகும்.
புதிய சொல்லான PMOS ஆனது இன்சுலின், ஆண்ட்ரோஜன், லூட்டினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் நுண்ணறை-தூண்டும் ஹார்மோன் (FSH) உள்ளிட்ட பல ஹார்மோன் அமைப்புகளை முன்னிலைப்படுத்துகிறது.
இது வளர்சிதை மாற்றக் குறைபாட்டை மையமாகக் கொண்டு, இந்நிலையை இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் இருதயப் பாதிப்பு அபாயங்களுடன் இணைக்கிறது.
ஆய்வுகளின்படி, இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் (சாதாரண உடல் எடை கொண்ட "ஒல்லியான PMOS" உடையவர்கள் உட்பட) கிட்டத்தட்ட 70-80% பேருக்கு இன்சுலின் எதிர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.