பல்நோக்கு ஒருங்கிணைந்தப் போக்குவரத்து பேருந்து வளாகம்
September 7 , 2024 497 days 484 0
தமிழ்நாடு அரசு ஆனது சென்னை பிராட்வேயில் குறளகத்தினை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்தப் போக்குவரத்து பேருந்து வளாகத்தின் (MMFC) ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.
10 மாடிகளைக் கொண்ட இந்த வளாகமானது ஒரே நேரத்தில் சுமார் 1,100 பேருந்துகள் இயக்கப் படும் வகையில் அமைய உள்ளது.
400க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளையும் கொண்டிருக்கும்.