2024 ஆம் ஆண்டில், IBAT ஆனது பல்லுயிர்ப் பெருக்கத் தரவுகளில் இதுவரை இல்லாத அளவில் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (USD) முதலீடு செய்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களில் (USD) இருந்து அதிகரிப்பைக் குறிக்கிறது.
ஒருங்கிணைந்தப் பல்லுயிர்ப் பெருக்க மதிப்பீட்டுச் செயல் முறைமை (IBAT) கூட்டணி ஆனது 2008 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது நான்கு முக்கிய உலகளாவிய வளங்காப்பு அமைப்புகளின் கூட்டமைப்பாகும்.
அதன் உறுப்பினர் அமைப்புகளாவன பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல், கன்சர்வேஷன் இன்டர்நேஷனல், IUCN மற்றும் UNEP உலக வளங்காப்பு கண்காணிப்பு மையம் (UNEP-WCMC) ஆகியனவாகும்.
இந்தக் கூட்டணியின் தலைமையகம் ஐக்கியப் பேரரசின் கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் உள்ளது.