TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான SBSTTA28 கூட்டம்

August 4 , 2026 21 hrs 0 min 58 0
  • உயிரியல் பன்முகத்தன்மை ஒப்பந்தத்தின் (CBD) கீழான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்கான துணை அமைப்பின் 28வது கூட்டம் (SBSTTA28) கென்யாவின் நைரோபியில் முடிவடைந்தது.
  • ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள உயிரியல் பன்முகத் தன்மை ஒப்பந்தத்தின் (CBD) 17வது தரப்பினரின் மாநாட்டிற்கு (COP17) முன்னதாக இக்கூட்டம் நடைபெற்றது.
  • 2030 ஆம் ஆண்டிற்கான 23 பல்லுயிர் இலக்குகளைக் கொண்ட குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை (KMGBF) செயல்படுத்துவதற்கான அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகளை SBSTTA வழங்குகிறது.
  • கடல் மற்றும் கடலோரப் பல்லுயிர் பெருக்கம், நிலையான வனவிலங்கு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உலகளாவிய பல்லுயிர் இலக்குகளை நோக்கிய முன்னேற்றம் குறித்து நாடுகள் விவாதித்தன.
  • செயற்கை உயிரியல் (உயிரியல் அமைப்புகளை வடிவமைக்க அல்லது மாற்றுவதற்கு மரபணுப் பொறியியலின் பயன்பாடு) மற்றும் அதன் சாத்தியமான நன்மைகள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்த முக்கிய விவாதம் நடைபெற்றது.
  • வரைவு செயற்கை உயிரியல் செயல் திட்டம் ஒரு நல்ல அடிப்படை என்பதை நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் நெகிழ்வுத்தன்மை, நிபுணர் குழுக்கள் மற்றும் தொழில் நுட்பப் பகிர்வு வழிமுறைகள் போன்ற சிக்கல்களில் வேறுபட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்