TNPSC Thervupettagam

பல்லுயிர் பாரம்பரியத் தளம் - போர்ஜூலி ஈரநிலம்

July 8 , 2026 16 hrs 0 min 20 0
  • ஒரைசா ருஃபிபோகன் என்ற காட்டு நெல் வகையைப் பாதுகாப்பதற்காக, அஸ்ஸாமில் உள்ள போர்ஜூலி ஈரநிலம் அதிகாரப்பூர்வமாக பல்லுயிர் பாரம்பரியத் தளமாக (BHS) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஈரநிலமானது, பயிரிடப்படும் நெல்லின் (ஒரைசா சடைவா) காட்டு மூதாதையினத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நன்னீர் சதுப்பு நிலமாகும்.
  • ஒரைசா ருஃபிபோகன் இயற்கையாகவே பல பூச்சிகள், நோய்கள், வெள்ளம் மற்றும் உவர்ப்புத்தன்மை போன்ற நிலைகளை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளதுடன் இது பருவநிலையைத் தாங்கி வளரும் நெல் வகைகளை உருவாக்குவதில் மதிப்புமிக்கதாக அமைகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை-தேசிய தாவர மரபணு வளப் பணியகம் (ICAR-NBPGR) மற்றும் அஸ்ஸாம் மாநில பல்லுயிர் வாரியத்தின் ஆதரவுடன் இந்தத் தளம் அதன் இயற்கை வாழிடத்திலேயே பாதுகாக்கப்படுகிறது.
  • தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகள், அரிய சிற்றினங்கள் மற்றும் முக்கியமான மரபணு வளங்களைப் பாதுகாப்பதற்காக, 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டத்தின் 37வது பிரிவின் கீழ் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்கள் (BHS) அறிவிக்கப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்